Advertisement
Advertisement

காங்கிரஸ் மூத்த தலைவர் பிரியரஞ்சன்தாஸ் முன்ஷி காலமானார்

கடந்த 8 ஆண்டுகளாக கோமா நிலையில் இருந்த காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான பிரியரஞ்சன் தாஸ் முன்ஷி, மருத்துவமனையில் காலமானார்.

மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த 72 வயதான பிரியரஞ்சன் தாஸ் முன்ஷி, மன்மோகன் சிங் தலைமையிலான அமைச்சரவையில் நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சராக பதவி வகித்தார். 2008ஆம் ஆண்டு வலிப்பு மற்றும் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டதால், மூளைக்கு ரத்தம் செல்வது தடைபட்டது. இதனால் கோமா நிலைக்கு தள்ளப்பட்ட பிரியரஞ்சனை, அவரது மனைவியும், மகனும் கவனித்து வந்தனர். கடந்த ஒரு மாதமாக அவரது உடல்நிலை மோசமானதை தொடர்ந்து அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதும் துரதிருஷ்டவசமாக பிரியரஞ்சன் தாஸ் முன்ஷி உயிரிழந்து விட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன