Advertisement

காங்கிரஸ் கட்சியின் மாநாட்டுக்கு தலைமை ஏற்கிறார் ராகுல் காந்தி!

டெல்லி தால்கதோரா மைதானத்தில் இன்று காங்கிரஸ் கட்சியின் உயர்மட்ட மாநாடு நடைபெறுகிறது. பணம் மதிப்பிழப்பு உள்பட மத்திய அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக இந்த மாநாட்டை காங்கிரஸ் கட்சி நடத்துகிறது. முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் உள்பட மூத்த தலைவர்கள் பலரும் இந்த மாநாட்டில் பங்கேற்க உள்ள நிலையில், ராகுல் காந்தியின் தலைமையில் மாநாடு நடத்தப்படும் என்று காங்கிரஸ் கட்சித் தலைமை அறிவித்துள்ளது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த மாநாட்டில் அவர் பங்கேற்பாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதுகுறித்த செய்தியாளர்களின் கேள்விகளுக்கு நேரடியாக பதில் அளிக்க மறுத்துவிட்ட கட்சியின் செய்தித் தொடர்பாளர் சக்தி சிங் கோஹில், மத்திய அரசின் பணம் மதிப்பிழப்புக்கு எதிரான போராட்டங்களை ராகுல் காந்தி தலைமையில்தான் காங்கிரஸ் கட்சி நடத்தி வருவதாக கூறினார். கடந்த மாதம் கட்சியின் தொடக்க நாள் விழா மற்றும் செயற்குழு கூட்டம் ஆகியவையும் ராகுல் காந்தி தலைமையில்தான் நடைபெற்றது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன