காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்கப்போகிறார் ராகுல் காந்தி

காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி விரைவில் பொறுப்பேற்க உள்ளதாக அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான வீரப்ப மொய்லி தெரிவித்துள்ளார்.

உட்கட்சித் தேர்தல் மூலம் கட்சியின் தலைவராக ராகுல்காந்தி தேர்ந்தெடுக்கப்பட இருப்பதாக அவர் கூறியுள்ளார். அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ராகுல் காந்தி, கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்கத் தயார் என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், அவர் உடனடியாக கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்பது கட்சிக்கு நன்மையை ஏற்படுத்தும் என்றும், அடுத்த மாதம் தலைமைப் பொறுப்பை ஏற்க வாய்ப்பிருப்பதாகவும் வீரப்ப மொய்லி கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன