கழிவறையை சுத்தம் செய்து மனிதக் கழிவுகளை அள்ளச் சொல்லுவதாக பள்ளி மாணவி புகார்

கோவை அருகே உள்ள பள்ளி ஒன்றில் மனிதக்கழிவை அள்ளச் சொல்வதாகவும், உடற்கல்வி ஆசிரியர் அநாகரிகமாக நடந்து கொள்வதாகவும் பாதிக்கப்பட்ட மாணவி மாவட்ட ஆட்சித்தலைவரிடம் புகார் மனு அளித்துள்ளார்.

கோவை மாவட்டம் செட்டிபாளையத்தில் உள்ள சக்தி நகரில் ஸ்ரீ சக்தி மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளியில் 8 மற்றும் 9 ஆம் வகுப்பு படிக்கும் மாணவிகள் சிலரை ஒவ்வொரு சனிக்கிழமையும் மனிதக்கழிவுகளை அள்ளச்சொல்வதாக கூறப்படுகிறது. கழிவறையை சுத்தம் செய்யாதவர்கள் அடித்து மிரட்டப்படுவதாகவும் மதிய வெயிலில் மைதானத்தில் ஓடச் சொல்லி தண்டனை வழங்குவதாகவும் கூறப்படுகிறது. 100 முதல் 500 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படுவதாகவும், தட்டிக்கேட்கும் பெற்றோரை பள்ளி நிர்வாகத்தினர் முட்டாள் என்று வசை பாடுவதாகவும், மாணவிகளிடம் உடற்கல்வி ஆசிரியர் தகாத முறையில் நடந்துக்கொள்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

உடற்கல்வி ஆசிரியர் மீதும் பள்ளி மாணவிகளை தரக்குறைவாக நடத்தும் பள்ளி நிர்வாகத்தினர் மீதும் நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சித்தலைவரிடம் பாதிக்கப்பட்ட மாணவி தந்தையுடன் வந்து புகார் அளித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன