கழிப்பிடம் கட்ட அரசு தரும் பணத்தில் லஞ்சம் வாங்கியதாக ஊராட்சி செயலர் மீது கிராம மக்கள் குற்றச்சாட்டு

திருவள்ளூர் அருகே தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட பயனாளிகளுக்கு அரசு கட்டித்தரும் கழிப்பிடங்களுக்கு 4 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

முழு சுகாதாரம் பேணும் வகையில் தனி நபர் கழிப்பிடம் கட்ட அரசு வழங்கும் 12 ஆயிரம் ரூபாயில் ஊராட்சி செயலாளர் 4 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்பதாகக் கூறப்படுவதே பிரச்னைக்குக் காரணம். போராட்டம் நடத்திய ஆத்துப்பாக்கம் ஊராட்சியைச் சேர்ந்த மக்களுடன் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். உரிய தீர்வு காண்பதாக போலீஸார் கூறியதை ஏற்று போராட்டத்தை கைவிட்ட பொதுமக்கள், ஊராட்சி செயலர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன