Advertisement
Advertisement

கல்லூரி பேருந்தில் இருந்து குதித்து மாணவி தற்கொலை

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே கல்லூரி பேருந்தில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

திருநெல்வேலி மாவட்டம் நான்குநேரியை அடுத்த அம்பலத்தைச் சேர்ந்த அபிஷா, சாத்தான்குளம் அருகே உள்ள நாசசேரத் ஜெயராஜ் அன்னபாக்கியம் பொறியியல் கல்லூரியில் 3ஆம் ஆண்டு படித்து வந்தார்.

கடந்த சில நாட்களாக குடும்ப பிரச்சினை காரணமாக மனமுடைந்து காணப்பட்ட அபிஷா, கடந்த 11ஆம் தேதி கல்லூரிக்குச் சென்றபோது, பனைக்குளம் என்ற இடத்தில் வரும்போது கல்லூரி பேருந்தில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றார்.

இதில் படுகாயமடைந்த அபிஷா, திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று காலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அபிஷா எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன