Advertisement

கலிஃபோர்னியாவில் 8-வது நாளாக பற்றி எரிந்து வரும் காட்டுத் தீ

அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் 8-வது நாளாக பற்றி எரிந்து வரும் தாமஸ் எனப் பெயரிடப்பட்ட காட்டுத் தீ, வடக்கு நோக்கி நகர்ந்து சான்டா பர்பாரா பகுதி மக்களை அச்சுறுத்தி வருகிறது.

கலிஃபோர்னியாவில் 8-வது நாளாக எரிந்து வரும் காட்டுத் தீ ஏற்கெனவே 500-க்கும் மேற்பட்ட கட்டிடங்கள், 1 லட்சத்து 70 ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட வனங்களை அழித்துவிட்டது. வறண்ட காற்று வடக்கு நோக்கி வீசுவதால் சான்டா பர்பரா (Santa BarBara), வென்ட்சுரா (Ventura) ஆகிய இடங்களில் உள்ள மக்கள் முக்கியமான உடமைகளை மட்டும் எடுத்துக்கொண்டு வெளியேறி வருகின்றனர்.

பொருட்களை எடுத்துக் கொள்ள 45 நிமிடங்கள் மட்டுமே அவகாசம் வழங்கப்பட்டதாகவும், தற்காலிக முகாம்களில் தங்கியுள்ள தாங்கள் எப்போது வீடு திரும்புவோம் என்ற எண்ணத்தில் இருப்பதாகவும் அப்பகுதி வாசிகள் கூறியுள்ளனர். தாங்கள் வீடு திரும்பும்போது, அங்கு வீடு இருக்குமா? அல்லது தீக்கிரையாகியிருக்குமோ என்ற அச்சம் நிலவுவதாகவும் அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன