Advertisement
Advertisement

கலிஃபோர்னியாவில் பற்றி எரியும் காட்டுத் தீயின் கோரப் பிடிக்கு அஞ்சி மக்கள் வெளியேற்றம்

அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் பற்றி எரியும் காட்டுத் தீயின் கோரப் பிடிக்கு அஞ்சி மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வருகின்றனர். கலிஃபோர்னியாவில் தொடர்ந்து எரிந்து வரும் காட்டுத்தீயால் ஏற்கெனவே 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் இருந்து சுமார் 50 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டனர். இந்நிலையில், வானிலை சாதகமாக இல்லாததால் தீ மேலும் அடுத்தடுத்த மரங்களுக்கு பரவி வனத்தை நாசமாக்கி வருகிறது.

தீ பரவும் என அஞ்சப்படும் பகுதிகளில் இருந்தும் மக்கள் வெளியேறி வருகின்றனர். வனப்பகுதியை ஒட்டிய பள்ளிகளுக்கு பாதுகாப்பு கருதி ஒரு வாரத்துக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பற்றி எரியும் காட்டுத் தீயை அணைக்க வீரர்கள் போராடி வருகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன