Advertisement

கலவரத்தைத் தூண்டியதாக ஹனிபிரீத் சிங் ஒப்புதல் வாக்குமூலம்

ஹரியானாவின் பஞ்ச்குலா பகுதியில் கலவரத்தைத் தூண்டியதாக ஹனிபிரீத் சிங் ஒப்புக்கொண்டுள்ளார். பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்ட சாமியார் குருமீத் ராம் ரஹிமின் வளர்ப்பு மகளான ஹனிபிரீத் சிங் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

கடந்த ஆகஸ்ட் 25ம் தேதி ராம் ரஹிம் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட போது, பஞ்ச்குலாவில் நிகழ்ந்த வன்முறையில் 36 பேர் உயிரிழந்தனர். இந்த வன்முறையைத் தூண்டியதாக ஹனிபிரீத் விசாரணையில் தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன