Advertisement

கலந்தாய்வு பட்டியலில் கள்ளக்குறிச்சி எஸ்விஎஸ் கல்லூரிக்கு அனுமதி மறுப்பு

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி எஸ்.வி.எஸ். யோகா மருத்துவக் கல்லூரியை கலந்தாய்வு பட்டியலில் சேர்ப்பது தொடர்பாக, நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றவில்லை என்று கூறி சுகாதார செயலாளர், ஹோமியோபதி சிறப்பு ஆணையர், பல்கலைக்கழக பதிவாளர் ஆகியோருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் கல்லூரிக்கு மத்திய அரசின் அங்கீகாரம் இல்லை என்று அரசுத் தரப்பில் கூறப்பட்டது. ஆனால் எஸ்விஎஸ் கல்லூரி சார்பில் அங்கீகார சான்றிதழை தாக்கல் செய்தனர். இதனால் கோபமடைந்த நீதிபதிகள், இதே நிலை நீடித்தால் மருத்துவப் பல்கலைக்கழக துணைவேந்தர் நேரில் ஆஜராக நேரிடும் என்று எச்சரித்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன