கர்நாடகத்தில் டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏ.க்கள் 6 பேரிடம் தமிழக போலீசார் விசாரணை

கர்நாடகத்தில் குடகு மாவட்டத்தில் சொகுசுவிடுதியில் தங்கியுள்ள தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் மடிகேரி கோயிலிருந்து விடுதிக்கு திரும்பியபோது அவர்களை மறித்து தமிழக போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.

குடகு மாவட்டத்தில் உள்ள சொகுசு விடுதியில் தங்கியுள்ள டி.டி.வி. தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களில் 6 பேர், தலைக் காவிரிக்குச் சென்று புனித நீராடி, மடிகேரி நகரில் உள்ள கோவிலில் தரிசனம் செய்தனர். இதனைத் தொடர்ந்து சொகுசு விடுதிக்குத் திரும்பிய எம்.எல்.ஏக்களின் காரை பின் தொடர்ந்த தமிழக போலீசார் ஒரு இடத்தில் அவர்களை வழிமறித்து சோதனையிட்டனர். அப்போது எம்.எல்.ஏ.க்களுக்கும் போலீசாருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனைத் தொடந்து எம்.எல்.ஏ.க்கள் சொகுசு விடுதிக்குத் திரும்பினர். சொகுசு விடுதியில் கர்நாடக போலீசார் 5 பேர் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர். டி.டி.வி.தினகரன் ஆதரவு வழக்கறிஞர் பாலசுப்பிரமணியன் என்பவர், திருவண்ணாமலையில் இருந்து எம்.எல்.ஏ.க்களை காண காரில் சென்றதாகவும், அவரை பின் தொடர்ந்து தமிழக போலீசாரும் சென்றதாகவும் கூறப்படுகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected !!