கரூர்:தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம்

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை சங்கத்தினரின் வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக உள்ளாட்சி தேர்தல் வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. ஊதிய உயர்வு உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழக அரசு தங்களை உடனடியாக அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதே கோரிக்கையை வலியுறுத்தி கன்னியாகுமரி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்கத்தினரின் காத்திருப்பு போராட்டம் இரவிலும் நீடித்தது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன