Advertisement
Advertisement

கருகும் பயிர்களைக் காக்க தள்ளுவண்டியில் தண்ணீர் கொண்டு வந்து ஊற்றும் அவலம்

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே, குடிப்பதற்கு குடங்களில் நீர் எடுத்துவருவதைப் போல, பயிர்களுக்கும் தள்ளுவண்டிகளில் தண்ணீரைக் கொண்டு வந்து ஊற்றும் அவலநிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.

விருதுநகர் மாவட்டம் காரியப்பட்டி அருகே உள்ள மறவன்பெருங்குடி கிராமத்துப் பகுதி வானம்பார்த்த விவசாயத்தை நம்பி இருக்கும் கரிசல் மண் பூமி. ஏற்கனவே விதைத்த பயிர்கள், போதிய மழையின்றி பாதியிலேயே கருகத் தொடங்கி உள்ளன. இதனிடையே, பருவமழையை நம்பி தற்போது விதைத்த பயிர்களும், முளைவிட முடியாமல் பொசுங்கி வருகின்றன. இதனால் தொலைதூரத்தில் இருந்து தள்ளுவண்டியில் தண்ணீரை கொண்டு வந்து ஊற்றி அவற்றைக் காப்பாற்ற விவசாயிகள் போராடி வருகின்றனர். வானம் பொய்த்ததால் ஏற்பட்ட இழப்பீடை ஈடு செய்ய அரசு உதவ வேண்டும் என அவர்கள் கோருகின்றனர்.

கடந்த ஆண்டு கிடைக்க வேண்டிய பயிர்க்காப்பீட்டுத் தொகை இதுவரை கிடைக்கவில்லை என்றும், இனிக்கிடைக்குமா என்பதும் தெரியவில்லை எனவும் விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

விவசாயிகள் எழுப்பும் வேதனைக் குரல், மத்திய, மாநில அரசுகளின் காதுகளை எட்டி, அவர்கள் கோரி நிற்கும் கருணையும், உதவியும் கிடைக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன