Advertisement

கரீபியன் கடல் பகுதியில் மையம் கொண்டுள்ள மரியா புயல்

மரியா புயல் கரீபியன் கடல் பகுதியில் உள்ள சிறு தீவான ((Dominica)) டொமினிகாவில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.

இர்மா புயலைத் தொடர்ந்து கரீபியன் கடல் பகுதியில் உருவாகியுள்ள மரியா புயல் கரீபியன் தீவுகள் வழியாக நகர்ந்துவருகிறது. மரியா புயல் டொமினிகா தீவைக் கடக்கும்போது ஐந்தாம் நிலை புயாலாக மாறியதால் மிகவும் வேகமான காற்றும் கனமழையையும் ஏற்படுத்தியது. இதனால் வீடுகளின் கூரைகள் தூக்கி எறியப்பட்டதுடன் பெருவெள்ளத்தில் ஏராளமான வீடுகள் மூழ்கியுள்ளன.

இது குறித்து ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ள டொமினிகா பிரதமர் ரூஸ்வெல்ட் புயல் கருணையில்லாமல் வீசியதாகவும் கடவுளின் கருணையால் உயிர் பிழைத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார். செவ்வாய்க் கிழமை இரவு கரீபியன் கடலின் வடமேற்கு திசையில் அமைந்துள்ள வர்ஜின் தீவுகள், மற்றும் புயூர்டோ ரிகோ (Puerto Rico) வழியாக ஐந்தாம் நிலைப் புயலாகவே மரியா நகரும் என அமெரிக்காவின் தேசிய புயல் ஆய்வு மையம் கணித்துள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன