கனமழை காரணமாக நிரம்பி வழியும் குண்டாறு அணை

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்மழை காரணமாக நெல்லை மாவட்டத்தில் உள்ள குண்டாறு நீர்த்தேக்கம் முழு கொள்ளளவை எட்டியுள்ளது.

மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால், செங்கோட்டை அருகே உள்ள 36 அடி உயரம் கொண்ட குண்டாறு நீர்த்தேக்கம் நிரம்பி வழிகிறது. நீர்வரத்து விநாடிக்கு 31 கனஅடியாக உள்ளது. அந்த தண்ணீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected !!