Advertisement

கதவை சாதுரியமாக திறந்து வெளியேறும் ரோபோக்கள் – மனிதர்களை அசத்தும் செயற்கை புத்திசாலித்தனம்

நாளுக்கு நாள் நவீனமடைந்து வரும் உலகில், சாத்தியப்படாது என்று கருதப்படும் செயல்களையும்.. எந்திரக்கரங்கள் எட்டிப் பிடிக்கின்றன. அமெரிக்காவின் பாஸ்டன் டைனமிக்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள நான்கு காலில் நடக்கும் ரோபோவின் வீடியோ சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

விலங்குகளைப் போன்று நடந்து வரும் ரோபோ சாதுரியமாக செயல்பட்டு எந்திரக் கையால் கதவை திறந்து வெளியேறுகிறது. இதே போன்று வீடுகள் மற்றும் அலுவலகங்களில் மனிதர்களைப் போன்றே சூழ்நிலையை அறிந்து செயல்படும் ரோபோக்களும் சமூக வலைத்தளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன