கடைமடைப் பகுதிக்கு வந்து சேர்ந்தது காவிரி நீர்

நாகை மாவட்டம் வேதாரண்யம் கடை மடைப் பகுதிக்கு வந்து சேர்ந்த காவிரி நீரை விவசாயிகள் மலர் தூவி வரவேற்றனர். வேதாரண்யம் தாலுகாவில் கரியாப்பட்டினம், வடமழை, மணக்காடு, தாணிக்கோட்டகம், பிராந்தியங்கரை, கிராமங்களில் 14 ஆயிரம் ஹெக்டேரில் சாகுபடி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், மேட்டூரில் திறக்கப்பட்ட காவிரி நீர், கடைமடை பகுதியான தாணிக்கோட்டகத்திற்கு மாலை வந்து சேர்ந்தது. ஐந்து ஆண்டுகளாக போதிய மகசூல் இல்லாததால், கவலை தோய்ந்து இருந்த விவசாயிகள், காவிரி நீரை பெரு மகிழ்ச்சியோடு வரவேற்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன