கடலூர் – ஸ்கூட்டரில் இருந்து ரூ. 3 லட்சம் கொள்ளை

கடலூரில் ஸ்கூட்டரில் இருந்து 3 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடலூரில் உள்ள முதுநகரில் ஆர்.பி.என் என்ற மீன் ஏற்றுமதி நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிபவர் பாலகிருஷ்ணன். இவர் சனிக்கிழமை அன்று வங்கியில் இருந்து 3 லட்சம் ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு ஸ்கூட்டரில் நிறுவனத்திற்கு வந்துள்ளார். பணத்தை ஸ்கூட்டரில் இருந்து எடுக்காமால் வளாகத்தில் நிறுத்திவிட்டு அலுவலகத்திற்கு சென்றுள்ளார். அவரை பின்தொடர்ந்து வந்த இருவர், வளாகத்தில் ஆள் நடமாட்டம் இல்லாத நேரத்தை பயன்படுத்தி, ஸ்கூட்டரின் சீட்டை உடைத்து பணத்தை திருடிச் சென்றுள்ளனர்.

புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த கடலூர் துறைமுகம் போலீசார் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected !!