Advertisement

கடலில் தத்தளித்த இலங்கை மீனவரை மீட்ட ராமேஸ்வரம் மீனவர்கள்

படகு கவிழ்ந்து நடுக்கடலில் தத்தளித்த இலங்கை மீனவரை, ராமேஸ்வரம் மீனவர்கள் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.

மன்னார் மாவட்டம் பேச்சாளையைச் சேர்ந்த தாசன் என்ற மீனவர், தனுஷ்கோடி அரிச்சல்முனை கடல் பகுதியில் தத்தளித்துக் கொண்டிருந்தார். அவரை ராமேஸ்வரம் மீனவர்கள் மீட்டு மண்டபம் கரைக்கு கொண்டு வந்தனர். அவரை கடலோர பாதுகாப்புக் குழுமத்தினர் பிடித்து விசாரித்ததில், அன்றன் என்பவருடன் சேர்ந்து மீன்பிடித்ததாகவும், அப்போது அலை அடித்து படகு கவிழ்ந்து விட்டதாகவும் கூறியுள்ளார். அன்றன் மாயமாகி விட்ட நிலையில், தம்மை ராமேஸ்வரம் மீனவர்கள் மீட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன