Advertisement

கடன்பெற பத்திரத்தை கொடுத்து உதவிய பால்வியாபாரி; உதவி பெற்றவர்கள் ஏமாற்றியதால் தூக்கிட்டுத் தற்கொலை

தஞ்சையில் தனது வீட்டுப் பத்திரத்தை அடகு வைத்து பண உதவி செய்த பால் வியாபாரி, உதவி பெற்றவர்கள் ஏமாற்றியதால் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். கீழ வண்டிக்காரத் தெருவில் வசித்து வந்த முருகேசன், பக்கத்து வீட்டுக்காரர்களான ஜெயக்குமார், சதீஷ்குமாருக்கு பண உதவிக்காக தனது வீட்டுப் பத்திரத்தை கொடுத்துள்ளார். பத்திரத்தை வைத்து மன்னார்குடியைச் சேர்ந்தவர்களிடம் 3 லட்ச ரூபாய் அவர்கள் கடனாகப் பெற்றுள்ளனர்.

வாங்கிய பணத்துக்கு இருவரும் முறையாக வட்டி கட்டாமல் வீட்டையும் வேறு இடத்துக்கு மாற்றிச் சென்றுள்ளனர். கடன் கொடுத்தவர்கள், வீட்டைத் தங்கள் பெயருக்கு எழுத்தித் தருமாறு முருகேசனை தொடர்ந்து மிரட்டி வந்ததாகத் தெரிகிறது. இதனால் மனமுடைந்த முருகேசன் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன