Advertisement
Advertisement

ஓமலூர் அருகே அனுமதியின்றி இயங்கிய 4 சாயப்பட்டறைகள் இடிப்பு

சேலம் மாவட்டத்தில் அனுமதியின்றி நடத்தப்பட்ட சாயப்பட்டறைகளை மாவட்ட சுற்றுச்சூழல் குழுவினர் இடித்துத் தள்ளினர். ஓமலூரை அடுத்த எம். செட்டிபட்டியில், பட்டு நூல்களுக்கு சாயம்போடும் பட்டறைகளை ரமேஷ், உலகநாதன், வெங்கட்ராமன் மற்றும் மல்லிகாராஜ் ஆகியோர் அனுமதியின்றி நடத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. மேலும் இந்தச் சாயப்பட்டறைகளில் இருந்து வெளியேறும் கழிவு நீரை அருகில் உள்ள விவசாய நிலங்களில் பெரிய குழிகள் அமைத்து அதில் விட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால் அருகிலுள்ள விவசாய நிலங்களில் உள்ள கிணற்று நீர் மிகவும் மாசு படிந்தும் விவசாயம் செய்வதற்கும், குடிநீருக்கும் சிரமமாக இருந்ததாக அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டி வந்தனர். இதையடுத்து பசுமைத் தீர்ப்பாயத்தினால் அமைக்கப்பட்ட மாவட்ட சுற்றுச்சூழல் குழுவைச் சேர்ந்த அதிகாரிகள் அனுமதியின்றி செயல்பட்ட நான்கு சாயப்பட்டறைகளையும் ஜேசிபி இயந்திரத்தின் உதவியுடன் இடித்துத் தள்ளினர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன