ஓட்டுநர் இல்லாத ஹோவர் டாக்சி சோதனை ஓட்டம்

ஓட்டுநர் இல்லாத ஹோவர் டாக்சியின் சோதனை ஓட்டம் துபாயில் வெற்றிகரமாக நடைபெற்றது. உலகின் முதல் ட்ரோன் டாக்சி என்ற பெருமையை இது பெறுகிறது. ஜெர்மனியைச் சேர்ந்த நிறுவனம் உருவாக்கியுள்ள இந்த டாக்சி, 18 ப்ரொபெல்லர்களை கொண்டது.

பார்ப்பதற்கு சிறிய ஹெலிகாப்டரை போன்று இருக்கும் ஹோவர் டாக்சியின் சோதனை ஓட்டத்தை துபாய் பட்டத்து இளவரசர் ஷேக் ஹம்தன் பின் முகமது துவக்கி வைத்தார். இரண்டு பேர் அமரும் இந்த தானியங்கி ஹோவர் டாக்சியில், ஒன்பது பேட்டரிகளுடன், 2 பாராசூட்டுகளும் உள்ளன. ரிமோட் உதவியின்றி 100 கிலோ மீட்டர் வேகத்தில் 30 நிமிடம் வரை பறக்கும் வகையில் ஹோவர் டாக்சி வடிவமைக்கப்பட்டுள்ளது. மனிதர்கள் யாரும் அமராமல், 200 மீட்டர் உயரத்தில் சுமார் 5 நிமிடம் பறக்கவிடப்பட்டு வெற்றிகரமாக சோதனை நடத்தப்பட்டது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன