Advertisement
Advertisement

ஓசோன் கட்டுமான நிறுவன அலுவலகங்களில் வருமான வரி சோதனை

பிரபல கட்டுமான நிறுவனமான ஓசோன் நிறுவனத்தின் 11 கிளைகளில் சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது, ஒரு லட்சம் நிறுவனங்கள் 25 லட்சம் ரூபாய் மற்றும் அதற்கு மேலான பணத்தை சென்னையைச் சேர்ந்த 4 கட்டுமான நிறுவனங்களில் முதலீடு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து வரி ஏய்ப்பு செய்ததாக வந்த தகவலையடுத்து பெங்களூருவைத் தலைமையிடமாகக் கொண்ட ஓசோன் குழும கட்டுமான நிறுவனத்தில் தற்போது வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது. சென்னையில் தி. நகர் மற்றும் அண்ணா நகர் உள்ளிட்ட இடங்களில் உள்ள அலுவலகங்களில் இந்தச் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதேபோல் ஓசோன் நிறுவனத்தின் பெங்களூரு, மும்பை, பானாஜி உள்ளிட்ட 11 கிளைகளிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன