Advertisement

ஓசூர் அருகே பொதுமக்களை தாக்கிய ஒற்றை யானை – 4 பேருக்கு காயம்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே காட்டுயானை ஒன்று மாடு ஒன்றை மிதித்ததுடன், மனிதர்களையும் தாக்கியதில் 4 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஓசூரை அடுத்த தளி வனப்பகுதியில் 30க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் சுற்றி வருகின்றன. இந்தக் கூட்டத்தில் இருந்து பிரிந்த ஒற்றை யானை தனியாக சுற்றி வருவதாகவும், சுற்றுவட்டார கிராம மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் வனத்துறையினர் அறிவித்து வந்தனர். இந்நிலையில் சாரண்டப்பள்ளி கிராமத்தில் புகுந்த ஒற்றை யானை பொதுமக்களையும், கால்நடைகளையும் தாக்கியது.

யானை தாக்கியதில் படுகாயம் அடைந்த விவசாயி மல்லப்பா என்பவர் ஓசூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அந்த யானை வனத்துறை ஜீப்பையும் துரத்திச் சென்றதாகக் கூறப்படுகிறது. யானை தாக்கியதில் இடுப்பு எலும்பு முறிந்த வேட்டைத் தடுப்புக்கவலரான ராஜ்குமார் என்பவர் தருமபுரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஜவளகிரி வனச்சரகர் முருகேசன், ஊழியர் முருகன் ஆகியோர் காயம் அடைந்து தேன்கனிக்கோட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன