Advertisement

ஓசூரில் டைல்ஸ் கடையில் தீவிபத்து – 2 மணிநேரத்துக்குப் பின் அணைக்கப்பட்டது

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் டைல்ஸ் கடையில் ஏற்பட்ட தீவிபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகின. ஓசூர் – பாகளூர் சாலையில் வெங்கடேஷ் என்பவருக்கு சொந்தமான டைல்ஸ் கடையில் இருந்து அதிகாலை புகை எழுந்ததைப் பார்த்த அப்பகுதி மக்கள், உடனடியாக தீயணைப்புத்துறைக்கு தகவல் கொடுத்தனர்.

விரைந்து வந்த அவர்கள் உள்ளே சென்று பார்த்த போது தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது. மின்சாரத்தை துண்டித்த பின்னர் தீயை அணைக்க தொடங்கிய வீரர்கள், 2 மணிநேரத்துக்குப் பின்னர் தீயை அணைத்தனர். மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று அவர்கள் கருதுகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன