Advertisement

ஒலிம்பிக் தொடங்குவதற்கு முன்பாக பிரம்மாண்ட ராணுவ பேரணியை நடத்த வடகொரியா திட்டம்

தென்கொரியாவில் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் தொடங்குவதற்கு முதல் நாள், பிரம்மாண்ட ராணுவப் பேரணியை நடத்துவதற்கு வடகொரியா திட்டமிட்டுள்ளது.

தென்கொரியாவின் பியாங்சாங் நகரில் அடுத்த மாதம் 9ஆம் தேதி குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் தொடங்க உள்ளன. இதன் தொடக்க விழாவில், வடகொரியாவின் விளையாட்டு வீரர்களும் பங்கேற்க உள்ளனர். பல்வேறு கட்டப்பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர் வடகொரியா இதற்கு ஒப்புதல் அளித்தது. இந்நிலையில், குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் தொடங்குவதற்கு முதல் நாள், பிப்ரவரி 8 ஆம் தேதி, பியோங்யாங் நகரில் வடகொரியா பிரம்மாண்ட ராணுவப்பேரணியை நடத்தத் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 12 ஆயிரம் வீரர்கள், அணு ஆயுதங்கள், ஏவுகணைகள் உள்ளிட்ட நவீன ஆயுதங்கள் இந்தப் பேரணியில் இடம்பெற உள்ளதாக கூறப்படுகிறது. வடகொரிய ராணுவம் தோற்றுவிக்கப்பட்டு 70 ஆண்டுகள் ஆவதை அனுசரிக்கும் வகையில் இந்தப் பேரணி நடைபெற இருப்பதாக வடகொரியா தெரிவித்துள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன