Advertisement

ஒரே வேட்பாளர் 2 தொகுதிகளில் போட்டியிட தடை விதிக்கக் கோரிய வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு

ஒரே வேட்பாளர் இரண்டு தொகுதிகளில் போட்டியிட தடை விதிக்கக் கோரிய வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.

ஒரே வேட்பாளர், ஒரே நேரத்தில் இரண்டு தொகுதிகளில் போட்டியிட தடை விதிக்கக் கோரி, பாஜகவைச் சேர்ந்த அஸ்வனி உபாத்யாய், உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, தேர்தல் ஆணையத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ஒரு வேட்பாளர், இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவதை தடுக்க, தேர்தல் சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும் என்று கூறினார்.

இது தொடர்பான பரிந்துரை 2004 மற்றும் 2016ஆம் ஆண்டுகளில் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டதாகவும், ஆனால், இதுவரை மத்திய அரசு தரப்பில் இருந்து பதில் இல்லை என்றும் வாதிட்டார். இதையடுத்து, பொதுநல மனு தொடர்பாக மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் ஆஜராகி பதிலளிக்க உத்தரவிட்ட தலைமை நீதிபதி அமர்வு, விசாரணையை ஒத்திவைத்தது.

 

 

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன