ஒரு வாரத்தில் இரட்டை இலை சின்னம் கிடைக்கும் – ஓ.பன்னீர்செல்வம்

இன்னும் ஒரு வாரத்தில் நமக்கு இரட்டை இலை சின்னம் கிடைத்து விடும் என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரத்தில் நடைபெற்ற அண்ணா பிறந்த நாள் விழாவில் பேசிய அவர், கடந்த 2011, 2016 என்று இருமுறை அதிமுகவை தொடர்ந்து ஆட்சியில் அமர வைத்தது ஜெயலலிதாவின் சாதனை என்றார். அவர் மறைவுக்கு பிறகு இந்த கட்சி ஒரு குடும்பத்தின் பிடியில் சிக்கக் கூடாது என்பதற்காக இரு அணிகளாக பிரிந்த நாம் இப்போது ஒன்று சேர்ந்து வலுவான அதிமுகவை உருவாக்கியுள்ளோம் என்றும் தெரிவித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன