ஒடிசாவில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு

ஒடிசாவின் ராயகடா ((rayagada)), காலஹண்டி ((kalahandi)) ஆகிய மாவட்டங்களில் சனிக்கிழமை பிற்பகல் முதல் பெய்து வரும் கனமழையால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இந்த மாவட்டங்களில் பல பகுதிகளை தண்ணீர் சூழ்ந்துள்ளதால் ஆயிரக்கணக்கான மக்கள் தவித்து வருகின்றனர். இந்திய விமானப் படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர்கள் மூலம் வெள்ளத்தில் தத்தளிப்பவர்கள் மீட்கப்பட்டு வருகின்றனர்.

நாகவல்லி மற்றும் கல்யாணி ஆகிய ஆறுகளில் வெள்ளம் அபாய அளவைத் தாண்டி பாய்கிறது. ராயகடாவில் நாகவல்லி ஆற்றின் மீது அமைந்துள்ள ரயில்வே பாலத்தை வெள்ளம் அடித்துச் சென்றது.

ஆற்றுப்பாலம், மற்றும் ரயில் பாலங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் போக்குவரத்து முடங்கியுள்ளது.

காலஹண்டி மாவட்டத்தில் ஆற்றுப்பாலத்தின் மீது ஆர்ப்பரித்து தண்ணீர் செல்வதால் பொதுமக்கள் உயிரை பணயம் வைத்த படி அதை கடந்து செல்கின்றனர்.

வெள்ள நிலவரம் குறித்து மீட்புப் படையினருடன் அம்மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக் ஆலோசனை நடத்தினார்.

பின்னர் பேசிய அவர், வெள்ள நிலைமை மோசம் அடைவதால் ராணுவம், கடற்படை மற்றும் விமானப் படையின் உதவியை நாடியுள்ளதாக கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன