Advertisement

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு – அமலாக்கத்துறை முன் ஆஜரான கார்த்தி சிதம்பரம்

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் கார்த்தி சிதம்பரம் டெல்லியில் அமலாக்கத்துறை முன் ஆஜரானார். ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது மொரீஷியஸ் நாட்டில் இருந்து 305 கோடி ரூபாய் நிதி திரட்ட ஐ.என்.எக்ஸ். நிறுவனம் முறைகேடாக அனுமதி பெற்றதாகவும் அதற்கு உதவிய முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகனான கார்த்தி சிதம்பரத்தின் நிறுவனத்துக்கு லஞ்சம் வழங்கப்பட்டதாகவும் புகார் எழுந்தது. இதுகுறித்து சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை விசாரணை நடத்திவருகின்றன.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு டெல்லி மற்றும் சென்னையில் கார்த்தி சிதம்பரத்துக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. இது தொடர்பாக மேல் விசாரணைக்கு கார்த்தி சிதம்பரம் இன்று டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜரானார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன