Advertisement

ஐஸ் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட இந்தியர்களின் நிலை என்ன என்பது தெரியவில்லை – ஈராக் பிரதமர்

ஈராக்கில் 3 ஆண்டுகளுக்கு முன் ஐ.எஸ்.தீவிரவாதிகள் கடத்திச் செல்லப்பட்ட இந்தியர்களின் நிலை குறித்து எதுவும் தெரியவில்லை என்று அந்நாட்டு பிரதமர் ஹைதர் அல் அபாதி கூறி உள்ளார்.

மொசூலில் தங்கி கட்டுமானத் தொழில் செய்து வந்த இந்தியர்கள் 39 பேரை ஐ.எஸ். தீவிரவாதிகள் கடந்த 2014ஆம் ஆண்டு பிடித்துச் சென்றனர். தற்போது வரை அவர்கள் கதி என்ன என்பது புதிராகவே உள்ளது. இதுகுறித்து பேசியுள்ள ஈராக் பிரதமர் ஹைதர் அல் அபாதி, இந்தியர்கள் பிடித்துச் செல்லப்பட்டது பற்றி தற்போது வரை விசாரணை நடத்தி வருவதாகவும், இதுகுறித்து மேற்கொண்டு எதுவும் கூறமுடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன