ஐதராபாத் ரயில் நிலையத்தில் தங்கக்கடத்தலில் ஈடுபட்டதாக ரயில்வே சுமை தூக்கும் தொழிலாளர்கள் கைது

தெலங்கானா மாநிலத்தில் இரண்டரை கிலோ தங்கக்கட்டிகளை சட்டவிரோதமாக கடத்தி வந்து விற்பனை செய்ததாக, ரயில்வே சுமை தூக்கும் தொழிலாளர்கள் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஐதராபாத் ரயில் நிலையத்தில் கைப்பற்றப்பட்ட 28 தங்கக்கட்டிகள் குறித்து ரயில்வே போலீசார் சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அதன்பேரில், ரயில்வே சுமை தூக்கும் தொழிலாளர்கள் மூவர், ஆட்டோ ஓட்டுநர்கள் இருவரை அவர்கள் கைது செய்தனர். தங்கக்கட்டிகளை கடத்தலுக்கு உதவியதாக விசாரணையில் தெரியவந்ததாக ரயில்வே போலீசார் தெரிவித்துள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன