Advertisement

ஏழுமலையான் கோயிலில் இசையமைப்பாளர் இளையராஜா,முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த், அமைச்சர் எம்.சி.சம்பத் வழிபாடு

இசைஞானி இளையராஜா, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஸ்ரீகாந்த், அமைச்சர் எம்.சி.சம்பத் ஆகியோர் இன்று திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வழிபாடு நடத்தினர். தரிசனம் முடித்து விட்டு வெளியே வந்த இளையராஜாவிடம், ரஜினியின் அரசியல் நுழைவு குறித்து கேள்வி கேட்கப்பட்டது.

ஆனால் அவர் செய்தியாளர்களிடம் பேசாமல் சென்று விட்டார். இதன் பின்னர் தமிழக தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் வழிபாடு நடத்தினார்.

இதை அடுத்து தரிசனம் செய்த முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த், வெளியில் செய்தியாளர்களிடம் பேசுகையில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் 20 ஓவர் தொடர்களில் இந்தியா வெற்றி பெறும் என்ற நம்பிக்கை இருப்பதாக தெரிவித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன