Advertisement

ஏற்கெனவே சுத்தமாக வைத்திருந்த இடத்தை தூய்மைப்படுத்திய மத்திய அமைச்சர் மனோஜ் சின்ஹா

தூய்மை இந்தியா திட்டத்தை வலியுறுத்த சென்னை வந்த மத்திய இணை அமைச்சர் மனோஜ் சின்ஹா, ஏற்கெனவே சுத்தம் செய்த இடங்களை புகைப்படத்துக்காக மீண்டும் தூய்மைப் படுத்தியதாக சர்ச்சை எழுந்துள்ளது.

ரயில்வே இணை அமைச்சர் மனோஜ் சின்ஹா வருகையை முன்னிட்டு, சென்ட்ரல் ரயில் நிலையத்தின் பிரதான நுழைவாயில் ஏற்கெனவே ரயில்வே ஊழியர்களால் நன்கு சுத்தம் செய்யப்பட்டு தயார் நிலையில் இருந்தது. அங்கு வந்த மனோஜ் சின்ஹா, புத்தம் புதிய துடைப்பங்களைக் கொண்டு, ஏற்கெனவே தூய்மையாக இருந்த இடத்தை கைகளில் உறை அணிந்தபடி சுத்தம் செய்து புகைப்படக் கலைஞர்களுக்கு போஸ் கொடுத்தார்.

பல ஆண்டுகளாக அழுக்கடைந்த நிலையில் இருந்த பயணியர் நிழற்குடை சுத்தம் செய்யப்பட்டு, வண்ணமும் பூசப்பட்டிருந்தது. அங்கும் வந்த மனோஜ் சின்ஹா, புதிய தூரிகையைக் கொண்டு வண்ணம் தீட்டி போஸ் கொடுத்தார்.

இதற்காக புதியதாக கட்டுக்கட்டாக துடைப்பங்களும், கையுறைகளும் வாங்கப்பட்டிருந்தது. தினம் தினம் பணியாற்றும் துப்புரவுப் பணியாளர்களுக்கும் இதேபோல் கையுறைகளும், முகக் கவசங்களும் வழங்கினால், அவர்களும் பாதிப்பின்றி உற்சாகமாகப் பணியாற்ற உதவும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன