ஏரியின் நீர்வழித்தடத்தை ஆக்கிரமித்து மருத்துவமனை கட்டடம், ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி பொதுமக்கள் போராட்டம்

சேலத்தில் நீரோடையை ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்ட குறிஞ்சி மருத்துவமனை கட்டடத்தை அகற்றக்கோரி பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.

சேலம் மாநகராட்சி அழகாபுரம் பகுதியில் இஸ்மாயில்கான் ஏரியில் இருந்து வெளியேறும் நீர்வழித்தடமான கோடி வாய்க்காலின் ஐந்து ரோடு பகுதியில் ஓடையை அடைத்து குறிஞ்சி மருத்துவமனையின் பிரம்மாண்டமான கட்டிடம் ஒன்று கட்டப்பட்டுள்ளதாக புகார் எழுந்தது. மேலும் மாநகராட்சிக்குச் சொந்தமான வழித்தடத்தையும் சுவர் எழுப்பி மருத்துவமனை நிர்வாகம் அடைத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

மருத்துவமனை ஆக்கிரமிப்பை அரசு அதிகாரிகள் கண்டுகொள்ளாதால் தாங்களும் ஆக்கிரமிப்பு செய்கிறோம் எனக் கூறி இப்பகுதி மக்கள்மருத்துவமனை வளாகத்தில் நீரோடை செல்லும் பகுதியில் குடிசை அமைத்து போராட்டம் நடத்தினர். அங்கு வந்த வருவாய் துறை அதிகாரிகள் மூன்று நாட்களுக்குள் மருத்துவமனை நிர்வாகத்திற்கு நோட்டீஸ் வழங்கி ஆக்கிரமிப்பை அப்புறப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று உறுதியளித்ததால் பொதுமக்கள் கலைந்துசென்றனர்.

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன