Advertisement

ஏமன் ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் கார் குண்டு தாக்குதல்

ஏமனில் ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 3 ராணுவ வீரர்களும், 5 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர்.

ஏமனின் தெற்குப் பகுதியில் உள்ள மதியா ((Mudiya)) மாகாணத்தில் உள்ள அபியான் ((Abyan)) என்ற இடத்தில் இருந்த ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். வெடிகுண்டு நிரப்பிய காரை ஓட்டி வந்த தீவிரவாதிகள் அதனை ராணுவ முகாம் மீது மோதினர்.

இந்தத் தாக்குதலில் காவல் பணியில் இருந்த 3 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். காரை ஓட்டி வந்தவர் உடல் சிதறி உயிரிழந்த நிலையில் மீண்டும் தாக்குதல் நடத்த வந்த 4 பேரை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர். இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த இயக்கமும் பொறுப்பேற்கவில்லை.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன