எல்லையில் பாக். ராணுவம் அத்துமீறி தாக்குதல்

ஜம்மு காஷ்மீர் மாநிலம் அர்னியா பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் கிராமவாசி ஒருவர் குண்டடிபட்டு உயிரிழந்தார்.

கடந்த 2 நாட்களில் மூன்றாவது முறையாக அர்னியா பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் நள்ளிரவில் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தான் ராணுவத்துக்கு இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுத்ததால், காலை 7 மணி வரை சண்டை நீடித்தது. பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் அர்னியாவை சேர்ந்த பொதுமக்கள் 6 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன