எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்கியதில் ராணுவ வீரர், 8 வயது சிறுமி உயிரிழப்பு

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச், ரஜோரி ஆகிய மாவட்டங்களின் எல்லையோர பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியதில் ராணுவ வீரர் ஒருவரும், 8 வயது சிறுமியும் உயிரிழந்தனர்.

பூஞ்ச், ரஜோரி ஆகிய மாவட்டங்களில் உள்ள எல்லையோர கிராமங்களில், பாகிஸ்தான் ராணுவத்தினர் சிறிய ரக பீரங்கிகளாலும், தானியங்கி துப்பாக்கிகள் மூலமும் அத்துமீறி தாக்குதல் நடத்தினர். ரஜோரியில் இந்திய ராணுவ நிலைகள் மற்றும் பதுங்கு குழிகளை நோக்கி நடந்த இந்த தாக்குதலில் அஹ்மத் என்ற ராணுவ வீரர் வீர மரணம் அடைந்தார்.

மேலும் ரஜோரியின் பஞ்ச்கிரேயன் ((panjgraian)) கிராமத்தில், 8 வயது சிறுமி சஜிதா கவுசார் துப்பாக்கி தோட்டா பாய்ந்து உயிரிழந்தாள். பாகிஸ்தானின் அத்துமீறலில் மேலும் இரண்டு ராணுவ வீரர்கள் படுகாயம் அடைந்து ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இருநாட்டு ராணுவ நடவடிக்கை குழுவின் தலைமை அதிகாரிகள் இன்று தொலைப்பேசியில் பேசிய நிலையிலும் பாகிஸ்தான் தரப்பில் இருந்து இந்த அத்துமீறல் நடந்துள்ளது. அப்போது, போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி அத்துமீறி தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுப்பதற்கு முழு உரிமை உண்டு என்று இந்திய ராணுவம் பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected !!