எல்லைப் பிரச்சினையில் மூன்றாவது நாட்டின் தலையீடு கூடாது – சீனா

இந்தியாவுடனான பிரச்சனையைத் தீர்க்க மூன்றாவது நாட்டின் தலையீடு தேவையில்லை என சீனா தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக, பீஜிங்கில் செய்தியாளர்களிடம் பேசிய சீன வெளியுறவுத்துறையின் செய்தித் தொடர்பாளர் ஹூவா சன்யிங் (Hua Chunying), எல்லைப் பிரச்னையில் மூன்றாவது நாட்டின் தலையீடு தேவையற்றது என்ற சீனாவின் கருத்துக்கு இந்தியா மதிப்புக் கொடுக்கும் என்று தாங்கள் நம்புவதாகத் தெரிவித்தார். இந்தியாவுடனான எல்லைப் பிரச்சினைக்கு, இருதரப்பும் ஏற்கத் தக்கவகையில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண சீனா முயற்சித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். இந்தியா – ஜப்பான் உறவு குறித்து கூறிய அவர், இருநாடுகளின் நட்பும் பிராந்தியத்தில் பரஸ்பர ஒத்துழைப்பு, அமைதி ஆகியவை மேம்பட உதவும் எனக் கருதுவதாக தெரிவித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected !!