Advertisement

எலக்ட்ரிக் வாகனங்களுக்கு இஸ்ரோவின் லித்தியம் அயன் பேட்டரி தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தலாம்

எலக்ட்ரிக் வாகனங்களை உருவாக்க இஸ்ரோ தனது லித்தியம் அயன் lithium-ion பேட்டரி தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தலாம் என மத்திய அமைச்சரவைச் செயலாளர் பி.கே.சின்ஹா தலைமையிலான குழு பரிந்துரை செய்துள்ளது.
சுற்றுச் சூழலைப் பாதுகாக்கவும் கச்சா எண்ணைய் இறக்குமதியைக் குறைக்கவும் பெட்ரோல் டீசல் இல்லாமல் மின்சாரத்தில் இயங்கும் புகை இல்லா வாகனங்களை பயன்பாட்டுக்குக் கொண்டு வருவதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.இந்நிலையில் மத்திய அமைச்சரவைச் செயலாளர் பி.கே.சின்ஹா தலைமையிலான குழு, எலக்ட்ரிக் வாகனங்களுக்கு இஸ்ரோவின் லித்தியம் அயன் பேட்டரி தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தலாம் என பரிந்துரைத்துள்ளது. விண்வெளி ஆணையம் மற்றும் சம்பந்தப்பட்ட துறைகளின் ஒப்புதலைப் பெற்று இஸ்ரோ தனது லித்தியம் அயன் lithium-ion பேட்டரி தொழில் நுட்பத்தை எலக்ட்ரிக் வாகனங்களில் பயன்படுத்த விரும்பும் நிறுவனங்களுக்கு அளிக்கலாம் என அந்தக் குழு தெரிவித்துள்ளது.

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன