என் மகன் என்னைப் போல் ஆக வேண்டாம் – சஞ்சய் தத் உருக்கம்

தமது மகன் தம்மைப் போல் ஆக வேண்டாம் என்று வேண்டிக்கொள்வதாக நடிகர் சஞ்சய் தத் கூறியுள்ளார். ஆயுத தடுப்பு சட்டத்தின்கீழ் 42 மாதங்கள் புனே ஏரவாடா சிறையில் கைதியாக இருந்து விடுதலையானார் சஞ்சய் தத்.

பிரபல நடிகர்கள் சுனில் தத்-நர்கிஸ் ஆகியோரின் மகனான சஞ்சய் தத் தமது பெற்றோரின் புகழை களங்கப்படுத்தியதாக கூறப்பட்ட நிலையில் போதை மருந்துக்கு அடிமையாகி தாம் அனுபவித்துள்ள துன்பங்களை விவரித்துள்ளார்.

தற்போது பூமி என்ற புதிய படத்தில் தமது வயதுக்கேற்ற புதிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் சஞ்சய் தத் இந்தப்படம் மூலம் பாலிவுட்டில் புதிய இன்னிங்ஸ் தொடங்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன