என்.சி.ஈ.ஆர்.டி பாடப்புத்தகங்களில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு மாற்றம்

NCERT எனப்படும் தேசிய கல்வி, ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் தயாரிக்கும் பாடப் புத்தகங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளன. NCERT பாடத்திட்டத்தின் புத்தகங்களில் பழைய புள்ளிவிபரங்களின்படி தகவல்கள் அச்சடிக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்தது. எனவே கடந்த ஏப்ரலில் பாடப்புத்தகங்களில் மாற்றங்கள் கொண்டுவர திட்டமிடப்பட்டது.

இதன் அடிப்படையில் 182 புத்தகங்களில், ஆயிரத்து 334 மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன. 10 ஆண்டுகளுக்குப் பிறகு புதுப்பிக்கப்பட்டுள்ள இந்த புதிய பாடத் திட்டத்தில் பண மதிப்பிழப்பு நடவடிக்கை, ஜி.எஸ்.டி முறை, பிரதமரின் தூய்மை இந்தியா திட்டம், பெண்குழந்தைகளை படிக்க வைப்போம்-பாதுகாப்போம் திட்டம் ஆகியவை குறித்தும் பாடங்கள் இடம்பெற்றுள்ளன.

பாடப் புத்தகங்கள் இன்னும் ஒரு மாதத்தில் கிடைக்கும் என்றும் தற்போது புத்தகங்கள் அச்சில் உள்ளதாகவும் NCERT இயக்குனர் ரிஷிகேஷ் சேனாபதி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *