எத்தனை சூழ்ச்சிகள் செய்தாலும் ஆட்சியைக் கலைக்க முடியாது என முதலமைச்சர் பழனிசாமி பேச்சு

எத்தனை சூழ்ச்சிகள் செய்தாலும் அ.தி.மு.க. ஆட்சியைக் கலைக்க முடியாது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சிவகாசியில் நேற்று நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, முக்கிய அறிவிப்புகளையும் வெளியிட்டார். தற்போது நகராட்சியாக உள்ள சிவகாசி மாநகராட்சியாக தரம் உயர்த்த பரிசீலிக்கப்படும் என்றும், அதனுடன் திருத்தங்கல் நகராட்சி மற்றும் சித்துராஜபுரம், விஸ்வநத்தம் உள்ளிட்ட ஒன்பது ஊராட்சிகளும் இணைக்கப்படும் எனவும் தெரிவித்தார். விருதுநகர் மாவட்டத்திற்கான பல்வேறு அறிவிப்புகளையும் முதலமைச்சர் வெளியிட்டார். தொடர்ந்து பேசிய அவர், எத்தனை சூழ்ச்சி செய்தாலும் அ.தி.முக.. ஆட்சியைக் கலைக்க முடியாது என்று குறிப்பிட்டார்.

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் நிகழ்ச்சியில் கலந்த கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன