எதிர்க்கட்சி வேட்பாளர் மீராகுமாருக்கு அகிலேஷ் யாதவ் ஆதரவு

குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளர் மீராகுமாருக்கு அகிலேஷ் யாதவ் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், சமாஜ்வாதிக் கட்சி நிறுவனர் முலாயம் சிங்கின் ஆதரவாளர்கள் ராம்நாத் கோவிந்துக்கு வாக்களிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

புதிய குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் திங்கட்கிழமை நடைபெறவுள்ளது.

இதில், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் மீராகுமாருக்கு உத்தரப்பிரதேச முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் ஆதரவு தெரிவித்துள்ளார்.

ஆனால், பெரும்பாலான சமாஜ்வாதி கட்சி எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பாஜக வேட்பாளர் ராம்நாத் கோவிந்தையே ஆதரிப்பார்கள் என முலாயம் சிங்கின் தம்பி சிவ்பால் யாதவ் கூறியுள்ளார்.

ராம்நாத் கோவிந்துக்கும், முலாயம் சிங்குக்கும் இடையே நல்ல நட்பு இருப்பதாக கூறியுள்ள சிவ்பால் யாதவ், ராம்நாத் கோவிந்த சிறந்த வேட்பாளர் என்பது முலாயம் சிங்குக்கு தெரியும் எனவும் கூறியுள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected !!