எட்டாவது முறையாக விம்பிள்டன் பட்டம் வென்று ரோஜர் ஃபெடரர் சாதனை

விம்பிள்டன் சாம்பியன் பட்டத்தை 8-வது முறையாக வென்று ரோஜர் ஃபெடரர் உலக சாதனை படைத்துள்ளார்.

விம்பிள்டன் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவுக்கான இறுதிப் போட்டியில் ஸ்விட்சர்லாந்தின் 35 வயதான வீரர் ரோஜர் ஃபெடரர், குரோஷிய வீரர் மரின் சிலிக்கை ((marin silic)) எதிர்கொண்டார்.

விம்பிள்டனில் 8-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றாக வேண்டும் என்ற முனைப்புடன் விளையாடிய ஃபெடரர் முதல் சுற்றை 6க்கு3 என்ற கணக்கில் கைப்பற்றினார். ஃபெடரரின் அபார ஆட்டத்தால் திணறிய மரின் சிலிக், இரண்டாவது சுற்றை 1க்கு 6 என்ற கணக்கில் இழந்தார். மூன்றாவது சுற்றையும் 6க்கு 4 என்ற கணக்கில் கைப்பற்றியதால் நேர்செட் கணக்கில் ஃபெடரர் வெற்றி பெற்று பட்டம் வென்றார்.

இந்த வெற்றியின் மூலம் விம்பிள்டன் போட்டியில் அதிக சாம்பியன் பட்டங்களை வென்ற வீரர் என்ற பெருமையை ரோஜர் ஃபெடரர் பெற்றுள்ளார். மேலும் இது கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஃபெடரர் வெல்லும் 19வது பட்டமாகும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected !!