Advertisement

உ.பி.-யில் 10, 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வெழுத ஆதார் கட்டாயம்

உத்தரப்பிரதேச மாநிலத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகளுக்கு ஆதார் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஆண்டு பிப்ரவரி மாதம் உத்தரப்பிரதேசத்தில் உள்ள பள்ளிகளில் பயிலும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகள் நடைபெறவுள்ளது.

தேர்வுக்கு பதிவு செய்யும் போதும், தேர்வு எழுத வரும்போதும், ஆள்மாறாட்டத்தைத் தடுக்க ஆதார் அட்டை கட்டாயம் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து அனைத்து மாவட்ட நிர்வாகங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

ஏதேனும் ஒரு மாணவன் ஆதார் இல்லாததால் தேர்வு எழுத முடியாமல் போனால் அதற்கு அவர் பயிலும் பள்ளியின் முதல்வர்தான் பொறுப்பு என்றும் அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன