உ.பி. முதலமைச்சர் மீதான விமர்சனங்கள் குறித்து பா.ஜ.க. கருத்து

உத்தரப்பிரதேச மாநிலத்தின் புதிய முதலமைச்சரைப் போல, ஏற்கனவே பிரதமர் மோடியின் மீதும் விமர்சனங்கள் எழுந்ததாக பா.ஜ.க. தெரிவித்துள்ளது. நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசத்தின் முதலமைச்சராக, காவி உடையுடன் நடமாடும் யோகி ஆதித்யநாத் தேர்வாகியுள்ளார். ஏற்கனவே, இந்து மதம் மற்றும் இந்துக்களுக்கு ஆதரவாக இவர் பேசிய பேச்சுக்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தன. அவை தற்போது பலரால் நினைவுகூரப்பட்டிருப்பதோடு, பாகுபாடு அரசியல் நிலவக்கூடும் என்ற அச்சமும் வெளிப்பட்டுள்ளது. இதுகுறித்து பேசிய பா.ஜ.க.செய்தித் தொடர்பாளர் நளின் கோஹ்லி, பிரதமர் நரேந்திரமோடி மீதும் இதேபோல கருத்து பரப்பப்பட்டதாகவும் கூறியுள்ளார். இதேபோல, வாய்ப்பளிக்காமல் ஒருவரை விமர்சிக்கக் கூடாது என்று வெங்கய்ய நாயுடுவும் கூறியுள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன