உள்ளாட்சி தேர்தல் தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மாநில தேர்தல் ஆணையர் ஆஜர்

உள்ளாட்சி தேர்தல் தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், மாநில தேர்தல் ஆணையர் மற்றும் செயலாளர் ஆகியோர் உயர்நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகினர். இதுதொடர்பாக திமுக தரப்பு தொடர்ந்த வழக்கில், இம்மாதம் 17ஆம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க உயர்நீதிமன்றம் ஆணையிட்டது. மேலும், கால அட்டவணையை வெளியிடுமாறு உத்தரவிட்டும், வெளியிடப்படாததால், மூல வழக்குத் தொடர்ந்த திமுக எம்.பி ஆர்.எஸ்.பாரதி, நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கில் உயர்நீதிமன்றத்தின் கண்டனத்திற்கு ஆளாகிய மாநில தேர்தல் ஆணையம், திங்கட்கிழமை நிபந்தனையற்ற மன்னிப்புக்கோரியது. செவ்வாய்க்கிழமை விசாரணையின்போது, மாநில தேர்தல் ஆணையர் மாலிக் ஃபெரோஸ்கான், செயலாளர் ராஜசேகர் ஆகியோர் உயர்நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகினர். அப்போது, குறிப்பிட்ட நாளில் உள்ளாட்சி தேர்தலை நடத்த முடியாதது அரசின் தோல்வியாக கருத வேண்டும் என திமுக தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார். இதனைத் தொடர்ந்து, வழக்கின் விசாரணையை புதன்கிழமைக்கு ஒத்திவைத்த உயர்நீதிமன்றம், மாநில தேர்தல் ஆணையரும், செயலாளரும் நேரில் ஆஜராக உத்தரவிட்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன