Advertisement

“உள்ளாட்சித் தேர்தலிலும் திமுக – காங்கிரஸ் கூட்டணி தொடரும்”- தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர் பேட்டி

தமிழகத்தில் வரும் உள்ளாட்சித் தேர்தலிலும் திமுக – காங்கிரஸ் கூட்டணி தொடரும் எனத் தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். சென்னை சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களிடம் பேசிய திருநாவுக்கரசர், போக்குவரத்துத் தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை முதலமைச்சர் நிறைவேற்ற வேண்டும் எனத் தெரிவித்தார்.

போராட்டத்தை எதிர்க்கட்சிகள் தூண்டிவிடுவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை மறுத்தார். ஆன்மீக அரசியலில் சாதி மதத்துக்கு இடமில்லை எனத் தெரிவித்துள்ள ரஜினிகாந்த் பாஜகவுடன் சேர்ந்தால் அவரை எதிர்ப்போம் என்றும் திருநாவுக்கரசர் குறிப்பிட்டார். வரும் உள்ளாட்சித் தேர்தலிலும் திமுகவுடனான காங்கிரசின் கூட்டணி தொடரும் என்றும் திருநாவுக்கரசர் தெரிவித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன