Advertisement

உலக பொருளாதார மன்றத்தின் ஆண்டுக் கூட்டத்தில் பிரதமர் மோடி உரை

சுவிட்சர்லாந்து நாட்டின் டாவோஸ் நகரில் நடைபெற உள்ள உலக பொருளாதார மன்றத்தின் ஆண்டுக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி வரும் செவ்வாய்க்கிழமை உரையாற்ற உள்ளார். பனி சூழ்ந்த ஆல்ப்ஸ் மலை நகரமான டாவோஸில் 5 நாட்கள் நடைபெறும் இந்த கூட்டத்தின் துவக்க விழா, திங்கட்கிழமை மாலையில் நடைபெற உள்ளது. இதில் இந்திய யோகா கலைஞர்களின் கலை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்திய பாரம்பரிய உணவுகளுடன் கூடிய விருந்தும் உலக தலைவர்களுக்கு பரிமாறப்பட உள்ளது. இதனைத் தொடர்ந்து உலக நாடுகளைச் சேர்ந்த தொழிலதிபர்களுக்கு பிரதமர் இரவு விருந்தளித்து உரையாட உள்ளார். செவ்வாய்க்கிழமை மன்றக்கூட்டத்தின் துவக்க உரையை பிரதமர் மோடி நிகழ்த்த உள்ளார். இந்த பயணத்தின் போது சுவிட்சர்லாந்து அதிபர் Alain Berset உள்ளிட்டோரையும், பிரதமர் சந்தித்துப் பேச உள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன